Monday, 2 March 2015

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூ - காக்கிச்சட்டை முதல் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்




சிவகார்த்திகேயன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ், தயாரிப்பில் வெளியான ’எதிர்நீச்சல்’ வெற்றிக்கு பிறகு 27ம் தேதி வெளியான படம் 2வது படம் காக்கிசட்டை. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயனின் எந்த படத்திற்கும் இல்லாத மிகப் பிரமாண்ட மாஸ் ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்’ சார்பில் மதன் உலகமெங்கும் ரிலீஸ் செய்துள்ளார்.



இந்த படம் 27,28 மற்றும் 1 ம் தேதி ஆகிய 3 தினங்களில் 13.34 கோடிகள் வசூலைக் குவித்துள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1.52. கோடி வசூல் செய்துள்ளது. தேர்வு காலம் மற்றும் கிரிக்கெட் உலகக்கோப்பை போன்றவற்றை தள்ளிவிட்டு இவ்வளவு வசூல் செய்திருப்பதை தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்களே மிக ஆச்சிரியமாக பார்க்கிறார்கள்.



வெற்றி பயணம் தொடர ’கோலிவுட்பீடியா’ சார்பாக வாழ்த்துக்கள்..........

No comments:

Post a Comment