ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடிக்க, ஆனந்த் ஷங்கர் இயக்கிய படம் 'அரிமா நம்பி'. ட்ரம்ஸ் சிவமணி இசையமைத்த இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். வசூல் ரீதியில் இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது.
'அரிமா நம்பி' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தையும் தாணு தயாரிக்க முன்வந்தார். படத்தின் நாயகனாக விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் ப்ரியா ஆனந்த் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிவுற்ற உடன், ஜூன் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment