Wednesday, 11 March 2015

அஜித்தின் அடுத்த படத்தில் ஸ்ருதி ஹாசன்-அனிருத்


அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று கடந்த சில மாதங்களாகவே தேர்வு நடத்தி வந்தனர்.
ஸ்ருதிஹாசன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று செய்திகளும் வெளிவந்தது. அந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது. அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்தான் நடிக்கப் போகிறார் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாக ஏற்கெனவே வெளியான செய்தியையும் உண்மை என்றே கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளனர்.
மேலும், இப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவாவின் ஏனைய இரண்டு படங்களிலும் சந்தானம் காமெடி வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ.எம்.ரத்னம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை தமிழ் புத்தாண்டில் பூஜையுடன் தொடங்கவுள்ளனர். முதல்கட்டப் படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்தவுள்ளனர்.
அஜித்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தாயையும், குழந்தையையும் கூடவே இருந்து கவனித்து வருகிறார் அஜித். விரைவில் பெயர் சூட்டு விழாவும் நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் இணைவார் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment