விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’. இந்தப் படத்தை சுரேந்திரன் இயக்க கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக நேகா , சுப்ரா ஐயப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தற்போது இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஏப்ரல் 2ம் தேதி உலகநாயகனின் ‘உத்தம வில்லன்’ மற்றும் ‘நண்பேன்டா,’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுடன் தற்போது ‘சகாப்தம்’ படமும் மோத உள்ளது.
No comments:
Post a Comment